Friday, August 14, 2009

எம்பெயர நான் தெரிஞ்சுகிட்டது !

முருகா வயசு ஆறு , 1977 ன்னு நெனெக்கிறேன் முருகன மொத மோதலா ஸ்கூலுக்கு சேக்கரதுக்காக திரு. வி . க. அரசு நடுநிலைப்பள்ளி ( இப்போ அது உயர்நிலைப்பள்ளி )க்கு ஒண்ணாம் வகுப்பு முருகனோட அப்பா கூட்டிகிட்டு போனாருஅதுவரைக்கும் பால்வாடிக்கு போகம அடம் பிடித்த முருகன் பள்ளிக்கு , பரபரப்பா உற்சாகமா முக்கியமா அழாம போனான், பாண்டிச்சேரியில அரசாங்க பள்ளிகள்அற்புதமாக பாடம் எடுப்பார்கள் தனியார் பள்ளிகள் எல்லாம் இரண்டாம் இடம்தான்
முருகன் பார்க்க பல்லிபோல இருப்பான் avana ஒரு கையில பிடிச்சுகிட்டு இன்னொரு கையில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு குரு தச்சனை எல்லாத்தையும் ஒரு பையில் போட்டு எடுத்துகிட்டு தலைமை ஆசிரியர் அறைக்கு போனாரு. தலைமை ஆசிரியர் எதோ பாரம் எல்லாம் நிரப்பி அப்பாவிடம் கையொப்பம் வாங்கிகிட்டு பையன விட்டுட்டு போக சொல்லிட்டாரு. தலைமை ஆசிரியர் ஒரு பெண் முருகனைஅழைத்து கொண்ண்டு வெளியே வந்தாரு அப்போதான் பள்ளி prayer நடந்துகிட்டு இருக்கு . முருகனைப்போலவே அன்றைக்கு சேர்ந்த பிள்ளைகளும் சிலர் அழுது அடம் பிடித்து கத்தி களேபரம் செய்து கொண்டிருந்தனர் முருகன் சமத்தான பையனா இருந்த்தான் அப்போதான் தலைமை ஆசிரியர் என்ன நினைத்தாரோ கொஞ்சம் வயதான ஆசிரியர் பண்பான பக்குவமான குழந்தைகளுக்கு பிடிக்கிற ஆசிரியர் . முருகனை தன் இடுப்பில் தூக்கி வைத்து கொண்டார் .அவனும்
ஒன்னும் அறியாத சிருவன்னை தன் தாயின் இடுப்பில் உக்காந்த மாதிரி இருந்தான்.
அதுவரை முருகனை வலம் வந்த நாம்ம பையன் , வாத்தியார் வகுப்பு வருகைப்பதிவேடு எடுக்கும்போது வேலாயுதம் வேலாயுதம்னு கூப்பிட சலனமே இல்லாம வகுப்பறையில உட்கார்ந்து இருந்தான் . அப்போதான் ஆசிரியர் முருகனை கூப்பிட்டு "டேய் ! ஓம்பெருதாண்ட வேலாயுதம் எழுந்து உள்ளேன் ஐயா சொல்லு ன்னு சொன்னார் . அப்போதான் முருகனோட பேரு வேலாயுதம் நு அவனுக்கே தெரியும் .

பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு போனான், நேர அம்மாகிட்ட போயீ , அம்மா எம்பெரு வேலையுதமான்னு கேட்டான் . அம்மாவும் ஆமாண்டா பள்ளிகூடத்துல ஒம்ப்பேறு வேலைய்தம் வீட்டுல முருகன்னு சொன்னாங்க .

தமிழில் வாக்கியம் அமைக்க