Sunday, December 25, 2011

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

எனக்கு போன வியாழக்கிழம (22 dec 2011 )காலையில ஒரு 11 : 50 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு " வேலாயுதம் சார் தான் பேசறீங்களா ?" 

நான் "ஆமாங்க என்னங்க வேணும் ?"

சார் நான் தி.நகர் D . C அலுவலத்திலிருந்து பேசறேன், நீங்க ஒங்க செல்போனே காணோம்னு மெயில் பண்ணீங்களா ?

ஆமாங்க ...

அந்த மொபைல் கெடசுடுச்சி..நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா ? எப்ப வருவீங்க ? ரொம்ப தூரத்தில இருக்கீங்களா சார் ?

ர்லதி.நக எங்க சார் ஆபீஸ் இருக்கு எதாவது லேன்ட் மார்க் சொல்லுங்க சார்.

தி.நகர் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல இருக்கு சார் .

ஓகே நான் இப்போ வர்றேங்க . நன்றி !

சரி இப்போ ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

கடந்த ஆகஸ்டு மாதம் 13 ம தேதி நான் என் குடும்பத்தோட காளாஸ்திரி போலாம்னு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றோம் .
அங்கே பேருந்து வர தாமதமாகியதால் அங்கும் இங்கும் ஓடி விளையடிக்கொண்டிருந்த என் பையனை தூக்கி வைத்துகொண்டு அங்கிருந்த இரும்பு இருக்கையில் அமர்ந்தேன். என் பையன் என் மீது ஏறி விளையாடியதில் என் பேண்டு பாக்கெட்டில் இருந்த செல் போன் கீழே விழுந்து விட்டது . அந்த சமயம் பேருந்து வந்து விட குழந்தைகளை அழைத்துக்கொண்டு பையெல்லாம் எடுத்துகொண்டு (என்னடா அப்பா பொண்டாட்டி என்ன செய்தாள் என்று கேட்பது புரிகிறது. அவள்தான் சுமார் இரண்டு கிலோ எடையுள்ள  பையை மாட்டிகொண்டு வருகிறாளே! இன்னும் புரியவில்லை என்றால் திருமணமான ஆண்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ) பேருந்தில் இடம் பிடித்து பேண்டு பாக்கெட்டில் கைய விட்டா பாக்கெட்டுல துணி இருக்கு ஆனா என் மொபைல் போன காணோம், எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏன்னா அதில ஏகப்பட்ட என்னோட சொந்த விஷயங்களை சேமித்து வைத்திருந்தேன் (அது எவ்ளோ தப்பு ன்னு இப்போ நல்லா தெரிஞ்சுகிட்டேன் ) நான் ஒடனே பக்கத்துல இருந்தவரிடம் மொபைல் வாங்கி என் நம்பருக்கு போன் அடித்தால் எடுத்த புண்ணியவான் ஒடனே சுவிட்ச் ஆப் பண்ணிட்டான் போல பல முறை முயற்சி பண்ணியும் முடியல என்ன பன்றதுன்னு தெரியாம வேற ஒருத்தருகிட்ட போன் வாங்கி ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி என் நம்பர பிளாக் பண்ணிட்டேன் .எனக்கு மூடு போய்ட்டுது , ஆச ஆசையாய் செஞ்சுட்டு போன புளிசாததோட வீட்டுக்கு திரும்பிட்டோம் , இதில எம் போட்டட்டிக்கு வருத்தம் நெறயவே இருக்கும் ஏன்னா நாங்கள் கல்யாணம் பண்ணி ஒன்பது வருஷமா கேக்குறா ... நான்தான் இதோ அதோ ன்னு இழுத்துகிட்டே வந்துட்டேன் ( இன்னமும் போகலங்கிறது வேற விஷயம் ) இருந்தாலும் எனக்காக எல்லோருமா வீட்டுக்கு இன்னொரு ஆட்டோ புடிச்சிகிட்டு வீடு வந்துட்டோம். இது எல்லாம் காலையில வீட்டுல இருந்து கெளம்பன ஆறு மணியில இருந்து மறுபடியும் வீட்டுக்கு வந்த எட்டு மணிக்குள்ள முடிஞ்சு போச்சு .

அப்புறம் அவசர அவசரமா கோடம்பாக்க பூர்விகா வந்தா அவங்க இன்னும் கடையே அப்பத்தான் தொறந்தாங்க. சரி புதுசா ஒரு மொபைல கிரெடிட் கார்டுல தேச்சி வாங்கிட்டு பக்கத்துலையே ஏர்டெல் ஷாப் ல ஒரு டூப்ளிகேட் சிம் கர்ட வாங்கி வந்துட்டு டென்ஷன் ல என்ன பன்றதுன்னு தெரியாம குடும்பத்தோட வளசரவாக்கம் பாண்டியன் ஹோட்டல் ல அசைவ சாப்பாடு சாப்பிட்டோம் ( பொண்டாட்டி புள்ளகளுக்கு திரும்பி வந்த சோகம் தெரியாமலிருக்க )

அடுத்த நாள் காலையிலேயே  போலிஸ் ஸ்டேஷன் ல பிராது கொடுக்காம்னு கே .கே. நகர் போலீஸ் ஸ்டேஷன் க்கு போனேன் அவங்க "நீங்க  கோயம்பேட்டுலதானே தொலச்சிங்க அதனால கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க ன்னு சொல்ல நான் நேரா கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன் பொய் எல்லாவற்றையும் எழுதி தொலைந்துபோன மொபைல் பற்றின டீடைல்ஸ் (என்னிடம் மொபைலோட IMRI நம்பர் இருந்தது நல்லதா போச்சு )ஒரு பிராது கொடுத்துட்டு வந்தேன் .

அத்தோட விடாம இன்டெர் நெட்ல தேடி ஒரு மெயில் ஐடி கண்டு பிடிச்சேன் அந்த ஐடிக்கு எல்லா விபரமும் டைப் பண்ணி அதாவது என்னோட மொபைல் வாங்கின தேதி, மொபைல் மாடல்,  என்ன கம்பனி, மொபைலோட IMRI நம்பர், கடைசியா யாருகிட்ட பேசினது அல்லது sms அனுப்பனது ன்னு எல்லா விபரமும் டைப் பண்ணி அனுப்பனேன் . இந்த மெயில் தான் எனக்கு என் மொபைல் போன கண்டு பிடுத்து தந்தது.

இதெல்லாம் முடிந்து நாலு மாதம் ஆயிட்டுது நானும் கொஞ்ச கொஞ்சமா மறந்து கிட்டு இருந்தேன் . இந்த சாதாரண மொபைல் போன போயி கண்டு பிடித்து தருவாங்களான்னு நெனைச்சு விட்டுட்டேன் . அப்புறம் ஏன்டா கம்ளைண்டு இவ்ளோ எல்லாம் பண்ணேன்னு கேகுறீங்களா எல்லாம் ஒரு அவாதான் . ஒழச்ச காசுல வாங்கினது கேடச்சுடும்னு ஒரு நம்பிக்க ....

அப்புறம் என்னடான்னா திடீர்னு மேலே சொன்னது போல போன் கால், மொதல்ல என்னால நம்ப முடியல அதே சமயம் உள்ளூர ஒரு சந்தோசம் ....
ஒடனே ஆபிஸ்ல நண்பர்கள்ட்ட சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷன் க்கு கேளம்ம்பிட்டேன்.

கரைக்டா போயிட்டேன் கீழ ஒரு பெண் போலீஸ் இருந்தாங்க அவங்க கிட்ட விபரத்த சொல்லு அங்கிருந்த நோட் புக்குல என்னோட பேரு அட்ரெஸ், யார பாக்கபோறேன் இந்த விபரங்களை எழுதிட்டு முதல் மாடிக்கு போனேன் இங்கிருந்த அறையில் முன்னாடி ஒரு கம்யூட்டரில் அமர்து இருந்தவரிடம்  (அவர் பேரு திரு . புருஷோத்தமன் , கான்ஸ்டபில்) கேட்டேன் , அவர் நீங்க வேலாயுதமா ன்னு கேட்டு அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர சொன்னார் .

பிறகு வேறு ஒருவரை அழைத்தார் , அவர் சுமார் சப் -இன்ஸ்பெக்டர் திரு. சிவக்குமார் , சுமார் முப்பத்தைந்து லிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர், எல்லோரும் மப்டியில் தான் இருந்தார்கள் . அவர் வந்து அவர் சேரில் அமர்த்து ரொம்ப பொறுமையாக, நாகரிகமாக , அழகாக, ரொம்ப நட்புடன் விசாரித்தார், எப்படிங்க தொலைச்சிங்க ன்னு அக்கறையோட விசாரித்தார், நான் எல்லாவற்றையும் சொன்ன வுடன் எனக்காக வருத்தபட்டார் . இதெல்லாம் எனக்கு பெராச்சரியமாக இருந்தது . ஏன் என்றால் சாதரணமாக போலிஸ் என்றாலே வேறு ஒரு எண்ணம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும் , அதையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு போதுசனத்திடம் இவ்வளவு பொறுமையாக ஒரு சப் - இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார் என்றால் இருக்காதா பின்னே ,

பின்பு அந்த செல் போனை கண்கொண்டு பிடித்த விபரங்களை சொன்னார், அதை கண்கொண்டு பிடிக்க அவர்கள் எங்கெல்லாம் போனார்கள் எப்படி தேடினார்கள் , சொல்லும்போது என்னடா சாதாரண இந்த போனுக்காக இவ்ளோ அலைஞ்சி இருக்காங்களே ன்னு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் நம்ம போன் கெடைச்ச சந்தோசம் ....இதை தான் அவரும் சொன்னார் ... சார் உங்க போன் நாங்க கண்டுபிடிக்க ஆன மதிப்பு கூட இல்லாம இருக்கலாம் ஆனா அத ஒங்ககிட்ட கொடுத்த ஒடனே நீங்க அடியிற சந்தோசம்   அதான் சார் எங்களுக்கு சந்தோசம் மனு சொன்னாரு. தயவு செய்து முக்கியமான தகவல்களை போனில் வைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து" டீ" சாப்டுறீங்களா ன்னு அன்பா கேட்டு அனுப்பியது என்னால் மறக்க முடியாது .

இந்த மாதிரியான நல்ல கடமை தவறாத மக்களுக்கு சேவை செய்ய காத்திருகுக்கும் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போன்ற நல்லவர்களை ஊக்குவிப்போம் .

கடமை தவறாத தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

நன்றி !


தமிழில் வாக்கியம் அமைக்க