Monday, June 28, 2010

மாலை நேரம்






















என் வீட்டு வாசற்படி 
இன்னும் உயரவில்லை !
குனிய மறுத்து 
இடித்த என்தலை 
வலி இன்னும் குறையவில்லை !
மாற்றம் வரும் வரை ...


 
மாலை நேரம் 
மயக்கும் இனிமை !
முகத்தையும் உடலையும் 
அழகூட்டி ....
கொன்றை மலர் சூடிய 
பெண்கள் 
தென்றலாய் ....
சூரியனின் மீது கோப கண்களை 
உருட்டியவாறு ...
முனகிய வாய்களில் 
வெறுப்பை உமிழ்ந்து 
தேடின வாசற்படியை நோக்கி !





இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும்  கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !

என் கோவம் ... இளமை

என் கோவம் ...
சுதந்திர பூமியில் 
எங்களின் சுதந்திரம் 
காந்திகளால் விற்கப்பட்டது !
மறைக்கப்பட்ட தியாகிகளால் 
மீட்டெடுக்க முடியவில்லை 
மண்ணுக்குள்ளே கண்ணிவெடிகள் !





இளமை 
என் முன்னோர்களின் இளமை 
அவர்களின் 
நெற்றிச் சுருக்கங்களிலும் 
வெண்ணிற கேசத்திலும் !
தாயார்களின் 
அகன்ற இடையிலும் 
தொளதொள வென்று 
தொங்கிய முலைகளிலும் !
நாங்கள் ...
எங்களின் இளமையை 
தேடிக்கொண்டிருக்கிறோம் !!!


  



இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும்  கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !

Wednesday, June 16, 2010

வயிற்றுப்பசிக்காக...

கன்னித்திரை கிழிந்த
கானகத் தேவதைகள்
கடித்து துப்பிய
எச்சிலின் ஈரம் !
நட்சத்திர சிதறல்களாய் மின்னும்
அடிமைத்தனத்தின் உதிரங்கள் ...
நாங்கள் வயிற்று வலிக்காக
மதம் மாறியவர்களல்ல
வயிற்றுப்பசிக்காக ஓன்று சேர்ந்த
உழைப்பாளிகள் .

பரோபகாரி ...

இருட்டினுடே மிளிரும் கண்களில்
என் ஒப்பனை முகத்தை
கறுப்புத்துணியால் மூடி
சுவாசத்தை நனைத்துக்கொண்டிருந்தேன் !

காரிருள் கருமேக
கூந்தல் விரித்த நிலையில்
வேடமிட்ட ஸ்திரீயின்
பின்னால் சுழலும்
வண்ண காகித விளக்கு !

சுவற்றினை மோதி மோதி
முத்தமிட்டு !
படிகாரத் துகள்களில்
பளிங்குமாளிகை கட்டும்
பரோபகாரி ...

இரவு நேர விருந்து ...

விரசக் கைகளின்
விட்டில் பூச்சிகளாய் !
வனாந்தரத்தில் மையல் கொண்ட
கண்ணாடித் தேக
காந்தர்வ கன்னிகளின்
முலைகளில்
வடியும்
அமுதத்தை திருடும்
காமுகக் காரனின்
இரவு நேர விருந்து ...

Monday, June 14, 2010

துரத்தப்பட்ட நினைவுகள் ...

என்னால் துரத்தப்பட்ட
நினைவுகள் ...

நிழலாய் பின்னே !
மறுக்கப்பட்ட
மரபுகளால்
துரத்தியடிக்கப்பட்ட
பிண்டங்களின் பின்னலாய் ...

அடிமாட்டு தொண்டர்கள் ...
என் ஜாதி என் ஜாதி ...
எண்சான் உடம்பை
கூறுபோட்ட ஜாதிதளைவர்களின்
கூர்மையான
அறிவால்
அறுக்கப்படும்
அடிமாட்டுத்தொன்டர்கள்
இன்னும் இன்னும் ...

எதிர்வீட்டு மாடியில்
நிரம்ம்பி வழியும் நீர்த்தொட்டி
அணைகள் திறக்கப்படவில்லை

கூண்டுக்குள் பேசும்
கிளிகள் ...
பூனைகள் வெளியே

நண்பனின் குயிலோசை
கேட்டு எழுந்தேன்
காகம் கரைந்தது

மதில்மேல் பூனை
என்னைப் பார்த்தது
புதிய ஆட்சி மாற்றம் !

ஆடுபுலி ஆட்டம்
ஆலமர நிழலில்
சாதிப்படுகொலைகள் !

கிறுக்கல்...

கிறுக்கல்... எனக்கு தொழில் கவிதை எழுதுவதல்ல ஆனால் மனதில் பட்டதை பார்த்ததை உரைநடையை உடைத்து எழுதுகிறேன் நன்றாக இருந்தால் உற்சாகப்படுத்துங்கள்...

குறைகள் இருந்ததால் உரக்க சொலலுங்கள் திருத்திக்கிறேன்.

ஓட்ட பானையில
ஓராழாக்கு அரிசி போட்டு
ஈரத்துணிய வயித்துல காயப்போட்டு
ஈரெழு லொகத்தையும் ஆண்டவங்க நாங்க !

ஆர்மேனிய பெட்டியில
ஏழு ஸ்வரத்துக்கு பதிலா எங்களின் ஒப்பாரி !
தாலாட்டு பாட்டுக்குள்ளே-எங்களின்
தாராளம் தெரியுதண்னே !

தூளி கட்ட எங்களின்
துகிலை கழற்றினோம்
துரொபதியின் மானம் காத்த
கண்ணன் இங்கு கானோமே!

என் சேலையில புல்லுண்டு,
பூ உண்டு காய் உண்டு,
கணி யுண்டு மரம் உண்டு, மலை யுண்டு
கூடவே பிஞ்சும் இருக்க-எங்களின்
திறந்த மனம் ஓரமாய் சிரிக்கிறது !
ஆண்டையிடம் வேண்டுகிறோம்
ஆண்டவண் இருந்தால்
ஆவண செய்ய சொல்லி !
இனி எங்களுக்கு
இலவசம் வேணாம்.

தமிழில் வாக்கியம் அமைக்க