என் வீட்டு வாசற்படி
இன்னும் உயரவில்லை !
குனிய மறுத்து
இடித்த என்தலை
வலி இன்னும் குறையவில்லை !
மாற்றம் வரும் வரை ...மயக்கும் இனிமை !
முகத்தையும் உடலையும்
அழகூட்டி ....
கொன்றை மலர் சூடிய
பெண்கள்
தென்றலாய் ....
சூரியனின் மீது கோப கண்களை
உருட்டியவாறு ...
முனகிய வாய்களில்
வெறுப்பை உமிழ்ந்து
தேடின வாசற்படியை நோக்கி !இந்த கவிதைகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் ஓட்டை இங்கே பதிவு பண்ணுங்கள்....மேலும் கருத்துக்களை என் இணைய முகவரிக்கு அனுப்புங்கள் . நன்றி !


No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...