கிறுக்கல்... எனக்கு தொழில் கவிதை எழுதுவதல்ல ஆனால் மனதில் பட்டதை பார்த்ததை உரைநடையை உடைத்து எழுதுகிறேன் நன்றாக இருந்தால் உற்சாகப்படுத்துங்கள்...
குறைகள் இருந்ததால் உரக்க சொலலுங்கள் திருத்திக்கிறேன்.
ஓட்ட பானையில
ஓராழாக்கு அரிசி போட்டு
ஈரத்துணிய வயித்துல காயப்போட்டு
ஈரெழு லொகத்தையும் ஆண்டவங்க நாங்க !
ஆர்மேனிய பெட்டியில
ஏழு ஸ்வரத்துக்கு பதிலா எங்களின் ஒப்பாரி !
தாலாட்டு பாட்டுக்குள்ளே-எங்களின்
தாராளம் தெரியுதண்னே !
தூளி கட்ட எங்களின்
துகிலை கழற்றினோம்
துரொபதியின் மானம் காத்த
கண்ணன் இங்கு கானோமே!
என் சேலையில புல்லுண்டு,
பூ உண்டு காய் உண்டு,
கணி யுண்டு மரம் உண்டு, மலை யுண்டு
கூடவே பிஞ்சும் இருக்க-எங்களின்
திறந்த மனம் ஓரமாய் சிரிக்கிறது !
ஆண்டையிடம் வேண்டுகிறோம்
ஆண்டவண் இருந்தால்
ஆவண செய்ய சொல்லி !
இனி எங்களுக்கு
இலவசம் வேணாம்.
//////கிறுக்கல்... எனக்கு தொழில் கவிதை எழுதுவதல்ல ஆனால் மனதில் பட்டதை பார்த்ததை உரைநடையை உடைத்து எழுதுகிறேன் நன்றாக இருந்தால் உற்சாகப்படுத்துங்கள்... /////
ReplyDeleteமிகவும் அருமையான பாடல் . பகிர்வுக்கு நன்றி
தொழிலுக்காக இந்த உலகத்தில் அதிகம் கவிதை எழுதியவர்கள் இல்லை . உணர்வுகளை கவிதைகளாக வடிதவிர்கள்தான் அதிகம் . உங்கள் கவிதையிலும் எதார்த்தம் மிகவும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது . பகிர்வுக்கு நன்றி
//ஆர்மேனிய பெட்டியில
ReplyDeleteஏழு ஸ்வரத்துக்கு பதிலா எங்களின் ஒப்பாரி !
தாலாட்டு பாட்டுக்குள்ளே-எங்களின்
தாராளம் தெரியுதண்னே !//
அருமை . வாழ்த்துக்கள்