வணக்கம் ! வணக்கம் ! வணக்கம் !
வலைதள சபையோர்களுக்கு என் அன்புகலந்த வணக்கம் ! நான் கட்டியக்காரனுங்க. எங்கயோ புதுச்சேரியில் கு. நா. பாளையத்துல பிறந்து வளர்ந்து இப்போ சிங்கார சென்னையில எந்திரத்தோட எந்திரமா வாழ்க்கைய ஓரளவு மனிதனாகவும் நேர்மையாகவும் இருப்பதாக நினைத்து என்னை சுற்றி நல்ல நண்பர்களின் துணையோடு, முதுகலை முடித்த என்னை சென்னைக்கு அறிமுகம் செய்து என் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என் இனிய நண்பன் பால சரவணனுக்கும், சென்னையில் யாரென்றே தெரியாத எனக்கு நண்பன் பாலா சொன்னதற்கு இணங்க நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும், என்னையும் ஒரு நண்பனாக சகோதரனாக, எனக்கு தன்னுடைய பிரஸ்ஸில் வேலையும் கொடுத்து , அடைக்கலமும் கொடுத்த கே. எஸ். கே. பிரசாத், என்னை அந்நியனாக பார்காமல் குடும்பத்தில் ஒருத்தனாகவே பார்த்த சுதா அக்கா, கோவிந்து அண்ணன் மற்றும் என் முன்னேற்றத்துக்கு உதவிய என் இனிய நண்பர்களுக்கும் இந்த பதிவின் மூலம் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். நன்றி !
வணக்கம் !
வாங்க.. வாங்க.. கட்டியக்காரன் அவர்களே!
ReplyDeleteபதிவுலகம் சார்பாக வரவேற்க்கிறேன்..
தொடரட்டும் உங்கள் சேவை..
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
ReplyDeleteகட்டியங்கூறி வரவேற்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வந்து கலக்குங்க பெயரே சூப்பரா இருக்கு
ReplyDelete