Monday, November 21, 2011

வில்லன் நடிகர் S.A. அசோகனை மறக்காத ரசிகர் !

 
இன்று மதியம் சாப்பாட்டை முடித்து விட்டு கொஞ்சம் வெளியே நடந்துவந்த போடு அந்த போஸ்டர் என்னை ஈர்த்தது, என்ன வென்று அருகே சென்று பார்த்தபோது மறைந்த வில்லன் நடிகர் அசோகன் அவர்களின் 29 வது நினைவு தினத்தை கூறும் விதமாக இருந்தது, எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

S.A. அசோகன்,  இந்த பெயர் இன்றைய தலைமுறை விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பரிச்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால் அறுபது எழுபதுகளில் ஏறக்குறைய அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த பெயர் மறந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அவர் தான் மறைந்த வில்லன், குணசித்திர, நகைச்சுவை (பிற்காலத்தில்) நடிகர் S.A. அசோகன், அந்த காலத்தில் அவருடைய வசன உச்சரிப்பு, அவரின் அந்த ஒருவிதமான வசனம் பேசும் தன்மை, அதை இன்றைக்கும் பல குரல் கலைஞர்கள் பலர் மேடைகளின் பேச கண்டிருக்கிறோம்,

அதெல்லாம் சரி இதெல்லாம் இப்போ என்னவென்று கேட்பது எனக்கும் கேட்கிறது...

இந்த மதம் நவம்பர் 19 . நடிகர் S.A. அசோகன் மறைந்த நாள்,......ஓகே இப்ப அதுக்கென்ன... அதுக்கென்னவா நமக்கு எத்தன பேருக்கு அது தெரியும் ...சரி ... தெரிஞ்சுக்கற அளவுக்கு அவர் என்ன அவ்ளோ பெரிய ஆளா... இல்லைதான் ஆனா அற்புதமான ஒரு நடிகர். எனக்கு அன்பே வா படம் பாக்குறப்ப பாதி படத்துக்கு மேலதான் வருவாரு ஆனா அவர நான் எம்.ஜி. ஆர். தம்பியா ன்னு கேட்டு இருக்கேன் அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் கொஞ்சம் உருவ ஒற்றுமை யா பாக்கலாம் .

அவருக்கு நவம்பர் 19 - தோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவருடைய ரசிகர் ஒருவர் சென்னையில் இன்றும் நினைவில் வைத்து எஸ். நீலகண்டன் என்பவர் போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கிறார், இது மறைந்த வில்லன், குணசித்திர நடிகர் அசோகனின் குடும்பத்தாருக்கு தெரியுமா என்று கூட தெரியாது.


நடிகர் S.A. அசோகன் 1961 ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.  திருச்சியை சொந்த ஊராக கொண்ட அவர், திருச்சி ஜோசெப் கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்த பொது அவருடைய நண்பர்களான பாலாஜி மற்றும் ஜெமினி கணேசன் மூலம் திரைப்படத்துறைக்கு நுழைந்தார். அவ்வையார் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் கூட நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் MGR, A. V. M. சரவணன், ஜெய்சங்கர், திருலோகச்சந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

பிற்பாடு அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R .  ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.

இவர் ஒரு  கோயம்புத்தூரை சேர்ந்த சரஸ்வதி என்ற  பிராமண பெண்ணை காதலித்து கல்யாணமும் செய்ய விரும்பினார் ஆனால் பெண் வீட்டில்  பக்கத்த எதிர்ப்பு. என்ன செய்யறது பெண்ணை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருத்துவ தேவாலயத்தில் சரஸ்வதி என்ற பெயரை மேரிஞானம் என்று மாற்றி எம்.ஜி. ஆர், திருலோகச்சந்தர், மற்றும் சரவணன் உதவியோடு திருமணம் செய்துகொண்டார்.

இவர் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்" என்ற பாடலை தனது சொந்த குரலில் பாடயுள்ளார். மேலும் இது சத்யம், தெய்வ திருமகள், காட்டு ராணி,  கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு வில்லன் பாத்திரத்திலும், நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்திலும் நடித்தார். எம்.ஜி. ஆர். உடன் ஏறக்குறைய 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.



கடையாக 19-11-1982 அன்று இரண்டாவது முறையாக ஏற்பட்ட இதய பாதிப்பால் தனது 52  வது வயதிலேயே இவ்வுலகை விட்டு பிருந்து சென்றார். அவர் மறைந்து 29 ஆண்டுகள் ஆனாலும் அவரை மறக்காத, அவரின் நடிப்பை பார்த்து இன்னமும் மறக்காத நமது நீலகண்டன் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை அசோகன் என்ற நடிகர் நம்மை விட்டு போகமாட்டார் என்பது அப்பட்டமான உண்மை.

வாழ்க அண்ணாரின் புகழ் !

நன்றி !

(எதோ எனக்கு தெரிந்த தகவல்கள் அடிப்படையில் கொஞ்சம் எழுதி உள்ளேன் மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள் இன்னமும் எழுதினால் மகிழ்ச்சியே !)

- யாகார்.

1 comment:

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க