மழையில் நாங்கள்...
கோனிப்பையை குடையாக்கி
கலவெட்டியால் (மம்மட்டியில்லை)
மண்னை நீவிவிட்டு
தண்ணீர் வீட்டுக்கு உள்ளே வராமல்
தடுக்கும் என் அம்மா
கோனிப்பை நனைந்து
அம்மாவும் நனைந்து....
வீட்டின் முற்றத்தில்
நானும் தம்பியும்
சட்டையின்றி குளிரில்
சுருங்கிய குஞ்சியை
இழுத்து அடித்த மூத்திரமும்
மழையோடுதான் கலந்தனவே !
ஒட்டுபோட்ட கால்சட்டையில்
ஜட்டி போடாத என் பின்புறத்தை
சீண்டி விளையாடி கோவத்தை
கிண்டும் தம்பி
எதிரே காரைவீட்டு
திண்ணையில் வேடிக்கை
பார்க்கும் சாம்பார்(எங்கள் ஊர் பெரிய்ய்ய் மனிதர்) சம்சாரம்
அப்பாவின் அதிகாரம்
அப்போதும் குறையவில்லை
அவருக்கு மட்டும் ஒரு கிழிந்த குடை !
குட்டிச்சுவர் விழாமல் இருக்க
சஞ்சீவி மலை தூக்கிய அனுமானாய்
மேலே கூரை !
எங்களின் சந்தோசம்
மழையைவிட பெரிசு அதேபோல்
எங்க வீட்டு கூரையில
விழும் மழைத்துளி கூட
சுத்தமாயிருந்தது ....
--யாகார்
//குட்டிச்சுவர் விழாமல் இருக்க
ReplyDeleteசஞ்சீவி மலை தூக்கிய அனுமானாய்
மேலே கூரை !//
நல்ல கற்பனை வரிகள். வாழ்த்துக்கள்
அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை. மழையில் நனைந்த ஆனந்தம்.
ReplyDeleteமழைக்கு இல்லை பாகுபாடு .. நமக்கு ஏன் இந்த வேறுபாடு ..
பணம் இல்லாத மனம் சுத்தம் .. மழைத்துளி போல ..
த3