Monday, July 5, 2010

அவதாரம்

மேலும் ஒரு அவதாரம் !
என்னில் சரிபாதிக்கு - என்னில்
சரிபாதியை கொடுத்த அவ தாரம் !
அரிதாரம் போடாமல்
மீண்டும் ஒரு நாடகம்
மனங்களின் மொழிகள்
மௌனங்களின் தொடுதலில்
புதிய பரிணாமம் !
இங்கே நான் அவள் விலங்கை
உடைக்க அவளோ
விலங்கிற்கு பூட்டு போடுகிறாள்
என் ஆணவத்திற்கு
மீண்டும் ஒரு பரீட்சை ...
புரிதலின்றி கண்களின் மொழி பரிமாற்றம்
தேடுதலில் இன்னமும்...

நன்றி !!!

3 comments:

  1. மிக்க நன்றி குரு !

    ReplyDelete
  2. ///மனங்களின் மொழிகள்
    மௌனங்களின் தொடுதலில்
    புதிய பரிணாமம் !///////

    உணமைதான் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete

பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க